ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ சிவன் நீக்கப்படுவதற்கு நயன்தாராதான் காரணமா.? என்ன விக்கி இப்படி பண்ணிட்டீங்களே…

ak-62
ak-62

நடிகர் அஜித் அவர்கள் துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏகே 62 திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்லாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மிக தீவிரமாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஏகே 62 திரைப்படத்திலிருந்து திடீரென விக்னேஷ் சிவன் அவர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்  இதனால் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க சில காலம் தாமதமாக இருக்கிறது. ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் இவனை நீக்கிவிட்டு தற்போது மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் எதற்காக நீக்கப்பட்டார் என்ற தகவல் தற்போது சமூக வலைதளத்தில் உலா வருகிறது. அது மட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ்வரன் விலகியதற்கு நயன்தாரா தான் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதாவது ஏகே 62 திரைப்படத்தில் கதாநாயகியை தேர்ந்தெடுக்கும் போது லைக்கா நிறுவனம் நடிகை திரிஷாவிற்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டு இருக்கிறது ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு காஜல் அகர்வால், ஐஸ்வர்யாராய் போன்ற நடிகைகளை நடிக்க வைக்க கேட்டு இருக்கிறது ஆனால் அதற்கும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார் விக்னேஷ்.

அதன் பிறகு வேறொரு பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்து சம்பளமும் பேசி முடிக்கப்பட்டது ஆனால் அதையும் விக்னேஷ் சிவன் மறுத்துவிட்டார் அதன் பிறகுதான் உண்மை தெரிய வந்திருக்கிறது அதாவது ஏகே 62 திரைப்படத்தில் தனது மனைவியான நயன்தாராவை நடிக்க வைக்க தான் இவ்வளவு திட்டம் தீட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதனால் கடுப்பான லைக்கா நிறுவனமும் அஜித்தும் இதை இப்படியே விட்டால் படம் இப்போது தொடங்காது என்று எண்ணி விக்னேஷ் சிவனை ஏகே 62 திரைப்படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உலா வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இது உண்மையாக இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்.