அஜித் 61 படத்தில் நடிக்கிறாரா மஞ்சு வாரியர்.? அவரே சொன்ன சூப்பர் தகவல்.

இயக்குனர் ஹச். வினோத் அஜித்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து  AK 61 திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது. தற்போது சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடல் எடையை அதிரடியாகக் அஜித் குறைத்து உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. AK 61படத்தில் அஜித் நடிக்கிறார் என்பது மட்டுமே படக்குழு திட்டவட்டமாக வெளியிட்டு உள்ளது.

அவரை தவிர எந்தெந்த நடிகர், நடிகைகள் மற்றும் காமெடி நடிகர் யார் என்பதை இதுவரையிலும் உறுதியாக சொல்ல படாமலேயே படக்குழு சர்ப்ரைசாக வைத்துள்ளது. ஆனால் சமீபகாலமாக அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தபு, மற்றும் ஒரு சில நடிகைகளின் பெயர்கள் வெளிவந்தன அதில் ஒன்றாக மலையாள நடிகை மஞ்சுவாரியரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஆனால் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மஞ்சு வாரியரிடம் பல்வேறு விதமான கேள்விகள் அதில் ஒன்றாக AK 61படத்தில்   படத்தில் நடிக்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர் எல்லாம் சஸ்பென்ஸ் விரைவில் படக்குழு அறிவிப்பார்கள் என கூறினார் அதை வைத்துப் பார்க்கும் போது கிட்டத்தட்ட AK 61 படத்தில் அஜித்துக்கு ஜோடி மஞ்சு வாரியர் இருப்பார் என கூறப்படுகிறது.

Leave a Comment