தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வசுந்தரா. இவர் தமிழில் நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த ஹேராம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் சினிமாவில் தல என்ற குறிப்பிடப்படும்.
அஜித்துடன் இணைந்து சிட்டிசன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிற மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் இந்தி, மலையாளம், கன்னடம் பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அடுத்த அவர் சினிமா உலகில் நீண்ட நாட்கள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் கடைசியாக 2007-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஏக் தாஸ்த்க் என்ற படத்தில் நடித்தார். அதன் பின் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இசையின் மீது அளவற்ற ஆர்வம் கொண்டுள்ளார்.
இவர் தமிழில் முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி என்ற பாடலை பாடி பல விருதுகளை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.பெரும்பாலான நடிகைகள் சினிமாவை விட்டு விலகிய பின்பு வீட்டிலேயே மூடங்கி கிடப்பது வழக்கம். ஆனால் வசுந்தர அவர்களோ அப்படிப்பட்ட பெண் அல்ல.

தற்பொழுது அவர் இசை அமைப்பது,பாடல் எழுதுவது, இசை நிகழ்ச்சி நடத்துவது, பிசினஸ் என்று பல வேலைகளை செய்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.