துணிவு, வாரிசு படத்தை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியுமா.? நிருபரின் செல்விக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த உதயநிதி..

0
ajith-
ajith-

மக்கள் மற்றும் ரசிகர்கள் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர். அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி உள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். மறுபக்கம் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

இந்த படத்தில் விஜய் மிகப் பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார் அவருடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் துணிவு படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் மூவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.

மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படத்தை யார் வெளியிடப் போகிறார் என்பதே தெரியாமல் இருக்கிறது இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினிடம் சமீபத்தில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு ஒவ்வொன்றிற்கும் விளக்கம் கொடுத்தார் அப்படி ஒரு தடவை அஜித்தின் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் குறித்து கேள்வி குறித்தும் அவர் விலாவாரியாக கூறியுள்ளார்..

அதாவது துணிவு என் கையில் தான் இருக்கிறது என்றும் வாரிசு யாரோ ஒருத்தர் வாங்கி வெளியிட போவதாகவும் பேச்சு வருகிறது ஆனால் இதுவரை வாரிசு படம் பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை என்று கூறினார்.. அதன் பின் குறுக்கிட்டு ஒரு நிருபர் இரண்டு மாஸ் ஹீரோகளின் படம் ஒன்றாக வருகிறது அதை நீங்களே வாங்கினால் எப்படி சமாளிப்பீர்கள் என்று கேட்க..

இதை கேட்டதும் டென்ஷன் ஆன உதயநிதி ஏன் பாஸ் ஹீரோக்கள்னா என்னங்க இதற்கு முன் அவர்கள் படங்கள் ஒன்றாகப் வரவில்லையா அப்படியே என் கையில் வந்தாலும் தமிழ்நாட்டில் மொத்தம் 1100 தியேட்டர்கள் உள்ளன இருவருக்கும் சமமாக 550, 550 என பிரித்து ரிலீஸ் செய்யப் போகிறோம் என்று சற்று உறக்கமாக கூறினார் மேலும் அதற்கு முதலில் என் கையில் வாரிசு படம் வருகிறதா என்று பார்ப்போம் என அவர் தெரிவித்தார்.