பா ரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” படத்தில் இசையமைக்க போவது இசைஞானி இளையராஜா கிடையாது.? வேறு யார் தெரியுமா.?

0

தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து வெற்றி கண்டு வருபவர் இயக்குனர் பா. ரஞ்சித். ஆரம்பத்தில் காதல் சமந்தப்பட்ட படங்களை எடுத்து வந்த இவர் போகப்போக சமூக அக்கறையுள்ள படங்களை கொடுத்து வருகிறார். அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் என்றால் பாருங்களேன்.

அதன் பிறகு மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை கொடுத்து வந்த இவர் சமீபத்தில் நடிகர் ஆர்யாவை வைத்து குத்துச்சண்டை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரை என்னும் படத்தை எடுத்திருந்தார். இந்த திரைப்படம் யாரும் எதிர்பாராத அளவிற்கு நல்லதொரு வசூலையும், நல்ல வரவேற்பையும் பெற்று கொடுத்தது. இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி இயக்குநர்களையும் மற்றும் தயாரிப்பாளர்களையும் ஆச்சரியப்படுத்தியது.

மேலும் இந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் பா ரஞ்சித் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமே இருக்கின்றன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் “நட்சத்திரம் நகர்கிறது” என்னும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆக்சன் படத்தை கொடுத்து விட்டு திடீரென காதல் படத்தை எடுக்க உள்ளதாக ரசிகர்கள் அந்தப் படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.  இயக்குனர் பா. ரஞ்சித் சிறந்த படைப்பாளிகளை எப்பொழுதும் கைவிடமாட்டார் அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கிய 5 படங்களுக்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக நிறுத்திவிட்டு.

இசைஞானி இளையராஜாவுடன் “நட்சத்திரம் நற்கிறது” படத்தில் இணைய உள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இளையராஜா அவர்களுடனும் இணைய வில்லையாம். இந்த திரைப்படத்தில் இளைய ராஜாவுக்கு பதிலாக பா. ரஞ்சித்  தென்மா என்ற இசையமைப்பாளர் உடன் இணைய போறாராம்.