விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்.. டெல்லி அணியின் புதிய கேப்டன் இவரா.?

இந்தியாவில் வருடம் வருடமாக ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது இதுவரை 15 சீசன்கள் முடிந்த நிலையில் 16 வது சீசன் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது அதற்கு முன்பாக ஐபிஎல் மினி ஏலம் அண்மையில் நடந்து முடிந்தது. பத்து ஐபிஎல்  அணிகளும் சிறந்த வீரர்களை காசு கொடுத்து வாங்கி உள்ளது.

ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே ஐபிஎல் அணிகள் ஒவ்வொன்றும் யாரை கேப்டனாக போடலாம், லெவனில் யாரை போடுவது என பல கோணங்களில் முடிவெடுத்து வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் டெல்லி அணியின் கேப்டன் ஆன ரிஷப் பந்து அண்மையில் கார் விபத்தில் சிக்கினார். படுகாயம் அடைந்த அவர் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் ரிஷப் பந்த்  ஆறு மாத காலம் கிரிக்கெட் விளையாட முடியாது என கூறப்படுகிறது இதனை அடுத்து டெல்லி அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக வேறு சிறந்த வீரரை கேப்டனாக தேர்வு செய்ய ஆலோசித்து வருகிறது.

இதுவரை டில்லி கேப்பிட்டல் அணிக்கு ரிஷப் பந்த் ஒரு கேப்டனாக சூப்பராக வழி நடத்தி உள்ளார் அவரது இடத்தை சரியாக நிரம்பும் வகையில் வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அந்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரரான டேவிட் வார்னரை கேப்டனாக போட யோசித்து வருகிறதாம். கேப்டனாக போட்டால்  அவரது அதிரடி ஆட்டம் குறையும் என மக்களின் கருத்தாக இருந்து வருகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் டெல்லி கேப்பிட்டல் அணி நிர்வாகம் ரிஷப் பந்துக்கு பதிலாக புதிய கேப்டனை இன்னுமும் தேர்வு செய்யவில்லை.. ஆனால் அதற்கான அறிவுப்பு வெகு விரைவிலேயே அதற்கான வரும் என சொல்லப்படுகிறது.

Leave a Comment