இசைவாணிக்கு மிகவும் பிடித்த பிக்பாஸ் போட்டியாளர் இவர் தானாம்.? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்.! யார் அந்த செல்லம் தெரியுமா.?

0
isaivani
isaivani

உலக நாயகன் கமலஹாசன் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை வேற லெவலுக்கு தூக்கிக் காட்டினார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஏனென்றால் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு பிடிக்குமா.. பிடிக்காதா.. என்று ஆரம்பித்த அவர்களுக்கே தெரியாது ஆனால் கமல் என்ற ஒரு நாயகன் அந்த நிகழ்ச்சியை திறம்பட கையாண்டு அதை வேறு ஒரு லெவலுக்கு எடுத்துச் சென்றார் என்று கூறவேண்டும்.

அவரது பேச்சு ஸ்டைல் ஆகியவை மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. ஒரு கட்டத்தில் போட்டியாளர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இது வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறது நான்கு சீசன்களில் சிறப்பாக முடிந்த நிலையில் 5 வது சீசன் தற்போது நடந்து கொண்டு வருகிறது அதில் 50 நாட்கள் சிறப்பாக தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.

தற்போது வைல்ட் கார்டு மூலம் பல்வேறு பிரபலங்கள் உள்ளே வந்து கொண்டிருக்கின்றனர் விஜய் டிவியில் நடன கலைஞராக அறிமுகமாகி அசத்திய அமீர் அண்மையில் வந்ததை தொடர்ந்து இன்று நடிகரான சஞ்சீவ் இன்று பிக்பாஸ் வீட்டில் களமிறங்கியுள்ளார்.

இது இப்படியிருக்க கடந்த வாரத்தில் வெளியே போன இசைவாணியிடம் ரசிகர்கள் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டு வருகின்றனர் அப்போது ஒருவர் உங்களுக்கு பிக் பாஸ் வீட்டில் பிடித்த பிரபலம் யார் எனக் கேட்டார் அதற்கு எனக்கு ஒரே ஒரு பிரபலம் தான் பிடிக்கும் அது பாவனி மட்டும் தான் என கூறினார்.

இச்செய்தி ஒரு சில தரப்பு ரசிகர்களும் பிடித்தாலும் ஒரு சிலர்கள் அவரைவிட நீங்கள் சிறந்த ஒருவருடன் நட்பு வைத்திருந்தார் இன்னும் பிக்பாஸ் வீட்டில் இருந்து இருக்கலாம் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.