ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ இவரா.? பிரபல பத்திரிகையாளர் சொன்ன ஷாக்கிங் தகவல்

jason sanjay
jason sanjay

Jason Sanjay : தமிழ் சினிமாவில் இன்று  வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். அந்த வகையில் லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது.

வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடித்த ரெடியாக உள்ளார் விஜய் ஒரு பக்கம் இப்படி போக.. மறுபக்கம் அவரது மகன் ஜேசன் சஞ்சய் முதலில் குறும்படங்களை இயக்கியும், நடித்தும் வந்தார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென லைகா நிறுவனத்துடன் ஒப்பந்தமாகி ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் அந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின அதனைத் தொடர்ந்து ஜேசன் சஞ்சய் பற்றிய பேச்சுக்கள் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக இருந்து வருகின்றன.

ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படத்தில் யார் ஹீரோ என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது அதற்கான தகவல்களும் கிடைத்துள்ளது இவர் இயக்கம் முதல் படத்தில் கவின், ஹரிஷ் கல்யாண், அதர்வா போன்றவர்கள் லிஸ்டில் இருப்பதாகவும் அதில் யாரேனும் ஒருவரை தான் ஜேசன் சஞ்சய்..

ஹீரோவாக தேர்வு செய்ய இருக்கிறார் என்றும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். பலரது கணிப்பு ஜேசன் சஞ்சய் நடிகர் கவின் உடன் கைகோர்க்கவே வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர்.   மேலும் உங்கள் முதல் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் எனக் கூறியும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.