“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரோஷினிக்கு பதில் இனி இவர் தான்.? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகளில் பல விதமான சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்து வருகின்றனர். அதில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா தொடர். இதை கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துவந்த பிரவீன் பெண்ணெட் என்பவர் பல வருடங்களாக இயக்கி வருகிறார்.

இந்த தொடர் தமிழக சீரியல்களில் டிஆர்பி யிலும் தொடர்ந்து முதலிடத்தில் வகிக்கும் தொடர் ஆகும். இந்த தொடருக்கு என பல ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த தொடரில் நடிக்கும் பிரபலங்களுக்கும் ரசிகர்கள் கூட்டமே உள்ளன. பாரதிகண்ணம்மா தொடர் தற்பொழுது ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன.

இந்த தொடரில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் இந்த சீரியல் மூலம் அறிமுகமாகி பின் மீடியா உலகில் பாப்புலரான பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்த வகையில் சீரியலை விட்டு பாதியிலே விலகி விடுகின்றன. அந்த வகையில் துணை நடிகராக நடித்து வந்த அகிலன் என்பவர் டாப் ஹீரோவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் சீரியலை விட்டு விலகினார்.

மேலும் இதில் வில்லி கேரக்டரில் நடித்து அசத்தி வரும் வெண்பா நிஜவாழ்க்கையில் நிறைமாத கர்ப்பமாக இருப்பதால் கூடிய விரைவில் அவருக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதனையடுத்து கதையின் நாயகியாக நடித்து வரும் ரோஷினிக்கு வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்த வகையில் பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறியதாக ஏற்கனவே நமக்கு தகவல்கள் வெளிவந்துள்ளன.

vellina
vellina

இவர் இந்த தொடருக்கான பல காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளாராம். தற்பொழுது இவருக்கு பதில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து வந்த நக்ஷத்ரா தான் கண்ணம்மா வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

Leave a Comment