தளபதி 67 படத்திற்கு இசையமைக்க போவது இவரா.? அனிருத்தை கழட்டிவிட்ட லோகேஷ்..

தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அதற்கு முக்கிய காரணம் அவர் இளம் இயக்குனர்களுடன் கைகோர்ப்பது தான் என சொல்லப்படுகிறது அந்த வகையில் இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தையும் ஒரு இளம் இயக்குனர் தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ், ஆக்சன்  என அனைத்தும் கலந்த ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது. வாரிசு திரைப்படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சங்கீதா,பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த்..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் படத்தை ரசிகர்கள் மக்களும் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்திழுக்க அப்டேட்களை கொடுக்கப் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த மாத இறுதிக்குள் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் மற்றொரு தகவலும் வெளிவந்துள்ளது.

அதாவது தளபதி 67 படத்திற்கு அனிருத் இசையமைப்பாளர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த படத்தில் பணியாற்ற மாட்டார் என தெரிய வருகிறது தளபதி 67 திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் யுவன் சங்கர்  ராஜாவும், நடிகர் விஜய்யும் முதல் முறையாக இணைந்து பணியாற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment