டெஸ்ட் கிரிக்கெட்டில் சங்ககாராவை விட இவர் தான் சிறந்த வீரர்.? ரசிகர்கள் கணிப்பு.

கிரிக்கெட் உலகில் யார் சிறந்த வீரர் என்பதை அவ்வப்போது  சில நிறுவனங்கள் கருத்து கணிப்பு நடத்தும் நடத்தும் அதுபோல தற்போது 21 ஆம் நூற்றாண்டில் யார் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை நடத்தியது இந்த லிஸ்டில் சச்சின் மற்றும் சங்ககாரா இடம்பெற்றிருந்தனர்.

இதில் யார் சிறந்த வீரர் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியிலும் தனியார் நிறுவனம் ஒன்று வாக்கெடுப்பு நடத்தியது. அதில் யார் சிறந்த வீரர் என்பதை சமீபத்தில் அந்த வாக்கெடுப்பு முடிவுகளை சுனில் கவாஸ்கர் வெளியிட்டார்.

அது சிறந்த வீரராக இருப்பவர் சச்சின் டெண்டுல்கர் என கூறப்படுகிறது காரணம் 16 வயதிலேயே கிரிக்கெட் விளையாட வந்துவிட்டார் 17 வயதில் எல்லாம் சதம் அடித்து விட்டார் இப்படி பல திறமைகளையும் உள்ளடக்கிய தோடு மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சிறந்த பங்களிப்பை ஒவ்வொரு போட்டியிலும் சச்சின் கொடுத்துள்ளதால் அந்த இடத்திற்கு சரியான வீரராக பார்க்கப்படுகிறார்.

சங்ககாரா டெஸ்ட் கிரிக்கெட் உலகில் சிறந்த ஆட்டக்கராக இருந்தாலும் அவர் வருவதற்கு முன்பாகவே 11 வருடங்களுக்கு மேலாக சச்சின் விளையாடி உள்ளார் என்பதால் கிரிக்கெட்டில் நல்ல புரிதலும் பல அனுபவங்களையும் சங்ககாரா விட சச்சினுக்கு இருக்கிறது.

sangakara
sangakara

மேலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தனது அதிரடியை  உடனடியாக மாற்றக்கூடிய சக்தி சச்சினுக்கு இருந்தது என பலரும் கூறுகின்றனர் இதனாலேயே ரசிகர்கள் சச்சினுக்கு முதன்மையான இடத்தை கொடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.

Leave a Comment