கோப்ரா வெற்றியா? தோல்வியா? கேள்வி எழுப்பிய நிருபர்.! நோ கமெண்ட்ஸ் சிம்பிலி வேஸ்ட் என சைய்கை காட்டிய நடிகர்

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் கோப்ரா இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி 2022-ல் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்த திரைப்படம் தான் கோப்ரா. இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு நடிகர் விக்ரம் பல கெட்டப்பில் நடித்துள்ளதாக கூறி ப்ரோமோஷன் செய்தார்கள்.

ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் மோசமான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. இந்த நிலையில் கோப்ரா படத்தை தமிழகத்தில் வெளியிட வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் போது கோப்ரா படத்தை பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செந்தில் சொல்வது போல் நோ கமெண்ட்ஸ் சிம்பிலி வேஸ்ட் என்பது போல இந்த படத்தைப் பற்றி எதுவுமே கூறாமல் படம் தோல்வி என சிக்னல் மட்டும் காட்டியுள்ளார்.

இதே போல  உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட திரைப்படங்களைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்துள்ளார். முதலில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு முதன் முறையாக வசூலில் அதிகம் லாபம் பார்த்த ஒரு திரைப்படம் டான் என்று கூறியுள்ளார்.

அதேபோல இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தைப் பற்றி ஏதாவது கூறுகள் என்று கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த உதயநிதி. பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்று இருக்கிறது ஆனால் கதையை கொஞ்சம் பெட்டராக எடுத்து இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

அப்போதுதான் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தை பற்றி ஏதாவது கூறுங்கள் என்று பிரபலம் கேள்வி எழுப்பினார் ஆனால் கோப்ரா படத்தை பற்றி சொல்ல ஒன்னுமே இல்லாததால் அப்படியே முனுமுனுத்தது போல் அமைதியாகிவிட்டார்.

Leave a Comment

Exit mobile version