சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” கவுரவ வேடத்தில் நடிக்கிறாரா.. வெளிப்படையாக உண்மை நிலவரத்தை சொன்ன இயக்குனர்.! சூப்பர் தகவல் இதோ.

0

சினிமா உலகை பொருத்த வரை  முதல் படம் வெற்றியடைந்தால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர்களும், நடிகர்களும் மிகவும் ஆர்வம் காட்டிவது வழக்கம். அந்த வகையில் பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் சந்திரமுகி.

இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு  போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். படம் வெளிவந்து பட்டைய கிளப்பியது. இதன் இரண்டாம் பாகம் படம் வெளிவந்த நாளில் இருந்தே ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

தற்போது ஒரு  வழியாக இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது தயாராகியுள்ளார் பி வாசு. இந்தப் படத்தில் ரஜினியின் ரோலில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். முதல் படத்தின் எதிர்பார்ப்பு தற்போது இரண்டாம் படத்திற்கும் எகிரி உள்ளதால் படத்தின் வெற்றியை தற்பொழுது தீர்மானித்து உள்ளனர்.

படக்குழு மேலும் சமூக வலைதளப் பக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வியை எழுதி வருகின்றனர் இதற்கு பதிலளித்த இயக்குனர் பி வாசு கூறுகையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் கதை முற்றிலும் வேறுபட்டது. இதில் ரஜினி நடிக்கவில்லை என கூறினார்.

மேலும் சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த யாரும் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார் மேலும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.