“நதிகளிலே நீராடும் சூரியன்” படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க போவது பாலிவுட் நடிகையா.? வலைவீசும் இயக்குனர்.! ஒர்க்அவுட் ஆகுமா.

0

சின்ன தல என அழைக்கப்படும் நடிகர் சிம்பு தற்போது மாநாடு  திரைபடத்தை  வெற்றிகரமாக முடித்த கையோடு அடுத்ததாக கௌதம் மேனனுடன் மீண்டும் ஒருமுறை இணைந்து “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார்.

இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ் என்பவர் தயாரிக்க உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அதற்கு முக்கிய காரணம் கௌதம்மேனன் பெரும்பாலும் காதல், ரொமான்டிக் படங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளதால் இந்த திரைப்படமும் அது போன்று தான் இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது கௌதம் மேனன் இந்தத் திரைப்படத்திற்காக ஒரு சூப்பரான நடிகையை இறக்க ஆரம்பத்திலிருந்து முடிவு செய்திருந்தாராம் அந்தவகையில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன் என்பவரை களமிறங்க தற்போது திட்டமிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சனோன் தற்பொழுது பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரை வெகுவிரைவிலேயே சந்தித்து கதையைக் கூறிய சிம்பு ஜோடியாக படத்தில் சேர்க்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.kirti sonnen

நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தில் இணைந்து விட்டால் ஹிந்தியில் மிகப்பெரிய ஒரு வரவேற்பை இந்த திரைப்படம்  கைபற்றும் என்பதே படக்குழுவின் கருத்தாக இருக்கிறது இருப்பினும் பொறுத்திருந்து பார்க்கலாம்.