தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷெரின். இந்த படம் அப்போது தனுஷ் கேரியருக்கு ஒரு நல்ல அடித்தளமாக அமைந்தத்து. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விசில் படத்தில் நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல தொடக்கமாக இருந்தது மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அழகிய அசுரா பாடல் மூலம் கவர்ச்சி நடனதை வெளிப்படுத்தி பல இளம் ரசிகர்கள் மனதில் குடிபெயர்ந்தார். ஆனால் ஷெரின் தொடர்ந்தும் மற்ற நடிகைகள் போல நடித்து முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு படங்களுக்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி தமிழ் சினிமாவில் ஷெரின் தென்படவில்லை பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு ரீஎன்ட்ரீ கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்பிருந்த ஷெரினை விட உடல் எடை கூடி பப்ளியான தோற்றத்தில் காட்சியளித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான ஷெரின் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் இதன் மூலம் பட வாய்ப்பை மீண்டும் கைப்பற்றலாம் என எதிர்பார்த்தார் ஷெரின்.
ஆனால் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை இந்தநிலையில் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் ஷெரின் ரசிகர்களின் கேள்விக்கு உரையாடியபோது ஒருவர் உங்களுக்கு எப்போ கல்யாணம் என கேட்டுள்ளார். அதற்கு ஷெரின் இப்போதைக்கு உணவை திருமணம் செய்து கொண்டேன் என சாப்பிடுவது போன்ற புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
