விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது இந்த சீரியல் முடிய இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்காளியில் மிகவும் பயங்கர ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஸ்ரீ மோயி என்ற படத்தின் ரீமேக் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இந்த கதையின் ஹீரோ, ஹீரோயினாக சதீஷ் மற்றும் சுசித்ரா இருவரும் நடித்து வருகின்றனர். குடும்பத் தலைவி தனது குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் எவ்வளவு கஷ்டப்படுகிறார் தனது ஆசைகளை விட்டுக் கொடுக்கிறார் என்பதனை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படி வீட்டில் இருக்கும் தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்து வரும் அந்த பெண்ணை திடீரென கணவர் விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து உள்ளார். அப்படி பாக்யா வீட்டில் தற்பொழுது ராதிகா கோபி இருவரும் தங்கி இருக்கும் நிலையில் இதனால் வீட்டில் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது.
மேலும் ராதிகா நீ தான் கோபியை விவாகரத்து செய்து விட்டில வீட்டை விட்டு கிளம்பு எனத் தொடர்ந்து கூறி வருகிறார். இவ்வாறு இப்படிப்பட்ட கதைகளத்துடன் இந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது சமூக வலைதளத்தில் பாக்கியலட்சுமி சீரியல் குறித்த ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் பாக்கியா கோபி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை போட்டு சுபம் என அந்த போட்டோவில் எழுதப்பட்டுள்ளது.

எனவே இதனை பார்த்த ரசிகர்கள் சீரியல் முடிய போகிறதா என கமெண்ட் செய்து வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பயங்கர ஹிட்டாக பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வரும் நிலையில் இந்த சீரியலை முடிக்க வாய்ப்பில்லை ஆனால் இந்த புகைப்படம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. எனவே இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.