RR அணி தோல்விக்கு அஸ்வின் தான் காரணம்.? விளக்கத்தை கொடுத்த சாம்சன்

இந்தியாவில் ஐபிஎல்  சீசன் சீசன்னாக  கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதன்படி ஐபிஎல் 16 வது சீசன் மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று இரவு ஏழு முப்பது மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பல பரீட்சை  நடத்தின.

முதலில் பேட்டிங் பண்ணிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 198 உங்கள் எடுத்தது அந்த அணியில் அதிகபட்சமாக தவான் 86 ரன்கள், prabhsimran 60 நாட்களும் அடித்தனர். இந்த இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்க வீரர்களாக ஜெயஸ்வால் மற்றும் அஸ்வின் களமிறங்கினர்  இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது ஏனென்றால் அதிரடி ஆட்டக்காரரான  பட்லர் இறங்காமல் அஸ்வின் களம் இறங்கினார்.

4 பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி வெளி ஏறினார் இதனை எடுத்து களம் இறங்கிய  சாம்சங், பட்டிலர் போன்றவர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து எடுத்தது.  இதன் மூலம் பஞ்சாப் கிங் அணி ஐந்து ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை கூடியது இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோற்பதற்கு முக்கிய காரணம்..

தொடக்க  வீராக அஸ்வின் இறங்கியது தான் என பலரும் குற்றம் சாட்டினார் இதற்கு விளக்கம் கொடுத்த சஞ்சீவ் சாம்சன் சொன்னது என்னவென்றால்.. பில்டிங் செய்யும் பொழுது பட்லர் விரலில் காயம் ஏற்பட்டது இதனால் அவர் பேட்டிங் செய்வதற்கு தயாராவதற்கு சில நேரங்கள் பிடித்தது அவருக்கு பதிலாக படிக்கலை தொடக்க வீரராக களம் இறக்கலாமா என்று  ஆலோசித்தோம்..

ஆனால் பஞ்சாப் அணியில் ராசா, ராகுல் சஹர் போன்ற ஸ்பின்னர்கள் இருந்ததால் அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை ஏனென்றால் ஸ்பின்னர்களை படிக்கல் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பது எங்களின் திட்டமாக இருந்தது இதன் காரணமாக அஸ்வினை தொடக்க வீரராக அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்தார்.

Leave a Comment