நடிகர் ஆர்யா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் அண்மை காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை மட்டும் ருசிக்கவில்லை..
அந்த வகையில் எனிமி, அரண்மனை 3 போன்ற படங்கள் தோல்வியை தழுவின. அதிலிருந்து மீண்டு வர சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து தொடர்ந்து நடித்து வருகிறார் ஆர்யா அதில் முதலாவதாக நடிகர் ஆர்யாவின் கேப்டன் திரைப்படம் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகிய வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் நடிகர் ஆர்யாவுடன் கைகோர்த்து ஐஸ்வர்யா லட்சுமி, ஹரி உத்தமன், சிம்ரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் இந்த படம் முழுக்க முழுக்க நாட்டு மக்களை ஏலியனிடமிருந்து எப்படி காப்பாற்றுகினார்கள் என்பதே படத்தின் கதை படம் விறுவிறுப்பாக பஞ்சம் இல்லாமல் சூப்பராக நகர்ந்து உள்ளது குறிப்பாக சிம்ரன் வரும் காட்சிகள் அனைத்தும் வேற லெவலில் இருந்தன.
இருப்பினும் இந்த படத்தின் விமர்சனம் சற்று கலவையானதாகவே இருந்து வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் ஆர்யாவின் கேப்டன் திரைப்படம் இரண்டு நாளில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் இரண்டாவது நாளில் 1.75 கோடி வசூலித்துள்ளது.
முதல் நாளில் 1 -ல் இருந்து 1.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது ஆர்யாவுக்கு கேப்டன் திரைப்படம் ஒரு சுமாரான வசூலையே இதுவரையிலும் பெற்றுக் கொடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் ஓரளவு இன்னும் சற்று வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.