அனிருத் காதல் திருமணம் செய்துகொள்ள போகிறாரா.?அந்த பெண் இவரா.?

0

தற்போது உள்ள இசை அமைப்பாளர்களில் மிகவும் பிரபலம் அடைந்தவர் அனிருத். இவர் பிரபல முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறந்து வரும் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய், அஜித், ரஜினிகாந்த் உட்பட இன்னும் ஏராளமான நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருகிறார்.

இவர் 2012ஆம் ஆண்டில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த 3 திரைப்படம் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படத்தின் மூலம் தான் அனிருத் இசை அமைபாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்திய அணிருத் 3 திரைப்படத்திற்குப்  ஏராளமான படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து தற்பொழுது தளபதி விஜய் நடிப்பில் தமிழ் சினிமாவிற்கு வெளியாக உள்ள மாஸ்டர் திரைப் படத்தில் இவர்தான் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள டாக்டர் திரைப்படத்திற்கும் இவர் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இசை அமைப்பாளர் சினிமா உலகில் பிசியாக இருந்து வரும் அனிருத் டாக்டர் திரைப்படத்தில் இணைந்து பாடிய பாடகி ஜோனிட காந்தியை காதலித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இன்னும் அனிருத் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. இது உண்மையா இல்லையா என்பதை இவர் கூறும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும்.