அடுத்த படத்தில் கமீட் ஆவதற்கு முன்பாக இப்படி ஒரு சாதனையை செய்ய போகிறாரா அஜித்.? இணையதளத்தில் பரவும் சூப்பர் புகைப்படம்.

தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார் அதற்கு காரணம் சினிமாவையும் தாண்டி இவர் நடந்து கொள்ளும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இருப்பினும் சினிமாவில் தற்போது சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரது வளர்ச்சி சினிமாவில் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

அந்தவகையில் விசுவாசம் நேர்கொண்டபார்வை போன்ற சூப்பர் ஹிட் படத்தை தொடர்ந்து “வலிமை” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துயுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்த நிலையில் அஜீத் தற்போது ரஷ்யாவில் தனது 5000 கிலோமீட்டர் பயணத்தை தொடங்கி வெற்றிகாராமக முடித்தார்.

அதன் பிறகு தாஜ்மஹால் சென்று தனது ரசிகர்கள் மற்றும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்தார் அதுவும் இணையதள பக்கத்தில் தீயாய் பரவிய நிலையில் அஜித் தற்போது பிரபலம் ஒருவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அவருடன் பல மணி நேரம் பேசி உள்ளார்.

தல அஜித் maral yazarloo என்ற உலக சுற்றுலா சென்ற நபரை நேரில் சந்தித்தார். இதுவரை அவர் உலகம் முழுவதும் 7கண்டங்கள் 64 நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். டில்லியில் அவரை தல அஜித் நேரில் சந்தித்தார் அப்போது உலகம் சுற்றும் அனுபவங்களையும் செல்வதற்கான பரிந்துரை மற்றும் வழிமுறைகளை கேட்டறிந்து கொண்டார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவியது. அஜித்திற்கு உலகம் சுற்ற மிக ஆசை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் வெகுவிரைவிலேயே அவரும் உலகம் சுற்றுலா செல்ல இருப்பதாகவும் ஒரு சில ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் கூறி வருகின்றனர்.  தல ஒரு விசயத்தை  கேட்ட மாட்டார். கேட்டால் அதில் காரணம் இருக்கும். அப்படி பார்த்தால் இந்த செய்தி மிகமுக்கியான ஒன்று தான்.

ajith
ajith

Leave a Comment