சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் – வேம்புலி கதாபாத்திரத்தை அஜித்திற்கு அர்ப்பணித்துள்ளாரா? கொண்டாடும் தல ரசிகர்கள்.! தீயாய் பரவும் செய்தி.

0

ஆர்யா நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான  “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

படத்தை பார்த்த பலரும் தற்போது புகழ்ந்து தள்ளி வருகின்றனர் அந்த அளவிற்கு இன்ச் பை இன்ச்சாக படத்தை செதுக்கியிருக்கிறார் பா ரஞ்சித் மேலும் இந்த படத்தில் நடித்த ஆர்யா, பசுபதி, வில்லன் JOHN KOKKEN போன்ற பலரும் பின்னி பெடல் எடுத்து உள்ளனர்.

இந்த திரைப்படம் ரஞ்சித்துக்கும் மற்றும் ஆர்யாவுக்கும் மிகப்பெரிய பெஸ்ட் படமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு சூப்பரான செய்தி ஒன்று பரவி வருகிறது அதாவது சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த வில்லன் john kokken பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரனின் கணவர் ஆவார்.

இவர் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் அஜித் குறித்து ஒரு சுவாரஸ்யமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி உள்ளது.

சினிமா உலகில் நான் மிகப்பெரிய வெற்றி அடைய முக்கிய காரணம் அஜித் தான். எப்பொழுதும் என்னை ஊக்கப்படுத்தி கொண்டிருந்ததற்கு நன்றி அஜித் சார் ஒவ்வொரு நாளும் கடின உழைப்பும் சிறந்த மனிதராக நீங்கள் என்னை ஊக்குவித்து வந்தீர்கள். இந்த வேம்புலி கதாபாத்திரத்தையும் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் ஐ லவ் யூ சார் என்று கூறியுள்ளார்.

அவர் போட்ட செய்தி தற்போது இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது மேலும் இந்த செய்தியை தல ரசிகர்கள் இப்போது கொண்டாடி வருவதோடு ஷேர் செய்து வருகின்றனர்.

இதோ சார்பட்டா பரம்பரை வில்லன் john kokken போட்ட பதிவு.