அரசியல் களத்தில் என்ட்ரி ஆகிறாரா அஜீத்.? கேள்விக்கு பதில் அளித்த தல.

0

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் தல அஜித். சினிமா உலகில் படங்களில் நடித்தாலும் தனக்கு பிடித்தமான வேலைகளை அவ்வப்போது செய்வது உண்டு அந்த வகையில் இவர் ட்ரோன், பைக் ரேஸ் கார் ரேஸ், சமைப்பது, துப்பாக்கி சுடுதல் போன்ற ஒவ்வொன்றிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். இப்படி இருந்தாலும் இவர் அரசியல் களத்திலும் இறங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என பலரும் தனது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ஆனால் அஜித்தோ அந்த விஷயத்தில் மட்டும் உறுதியாக இதுவரை இருந்து வந்துள்ளார். ஆனால் அவரை விடாமல் அரசியல்வாதிகள் ரசிகர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் அரசியலுக்கு வாங்க என கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர் அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் சினிமாவையும் தாண்டி அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அதில் தனது ரசிகர்களையும் மக்களையும் வைத்துள்ளார். பெரிய அளவில் தேர்தலில் களம் காணாத மக்கள் இயக்கம் திடீரென சமீபத்தில் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 52 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்ந்தவர்கள் ஜெயித்து உள்ளனர்.

வெகு விரைவிலேயே மிகப்பெரிய தேர்தல் போட்டிகளிலும் விஜயின் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்வியை மீண்டும் தூசு தட்டி உள்ளனர் ஆனால் அஜித்தோ பல வருடங்களுக்கு முன்பே அழகாக சொல்லிவிட்டார்.

அவர் கூறியது : நம்மை வழி நடத்த நமக்கு தலைவர்கள் தேவை இல்லை அதற்காக அனைவரும் அரசியலுக்கு வந்தா தலைவராக முடியாது நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடமையை சரியாக செய்தால் மட்டுமே போதும் நாடு நன்றாக இருக்கும் என அஜித் கூறினார்.