தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கிறது எனவே ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் ஆர்வத்துடன் காத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட முன்னணி நடிகரான விஜயின் உறவினராக சினிமாவில் நடிக்க வந்தவர் தான் நடிகர் விக்ராந்த்.
நடிகர் விஜய் மற்றும் விக்ராந்த் இவர்களுடைய பாடி லாங்குவேஜ் ஒரே போல் இருக்கும் என பலரும் கூறி வந்த நிலையில் என்னதான் இவர் நடிகர் விஜய் போல் சிலவற்றை செய்து வந்தாலும் இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே ஹீரோவாக நடிக்க தொடங்கிய இவர் தற்பொழுது வில்லன், குணச்சத்திர ரோல் போன்றவற்றில் தான் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது வருகிறது.
மேலும் தற்பொழுது இவர் ரஜினிகாந்த் அவர்களுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் அவர்களுடைய மனைவி பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது விக்ராந்த் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மானசா ஹேமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்பொழுது இரண்டு ஆண் குழந்தையும் இருக்கும் நிலையில் தற்பொழுது மானசாக ஒரு சீரியல் நடிகை என்பது தெரியவந்துள்ளது. ஆம், அதாவது நடிகர் விக்ராந்த் திருமணம் செய்து கொண்ட மானசா இதற்கு முன்பு டிவி சீரியல்களில் நடித்துள்ளார் அந்த வகையில் தற்பொழுது தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த உதிரிப்பூக்கள் சீரியலில் நடித்து இருக்கிறாராம்.

உதிரிப்பூக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற சீரியல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களாக நடிகர் விக்ராந்த் அவருடைய மனைவியை மனசாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் மிகவும் அழகாக இருக்கும் நிலையில் லைக்குகளும் குவிந்து வருகிறது.