தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் முதன்முதலாக துணை கதாபாத்திரத்தில் நடித்து தற்போது கதாநாயகனாக கலக்கி வருவது மட்டுமில்லாமல் சில முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டி வருகிறார்.
அந்த வகையில் இவர் ரஜினியுடன் நடித்த பேட்டை திரைப்படம் முதல் தன்னுடைய வேட்டையை ஆரம்பித்த நிலையில் அதன் பிறகு விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.அந்த வகையில் தற்போது இவரை உச்சத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் என்றால் அதில் விக்ரம் திரைப்படம் தான்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் கொடூர வில்லனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதியை தங்களுடைய திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரது கால்சீட் தருவார் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட் பக்கமும் பிஸியாக இருந்து வருகிறார்.
இதனால் புதிதாக அறிமுகமாகும் இயக்குனராக இருந்தாலும் சரி அவருடைய உற்ற நண்பர் வட்டாரத்தில் உள்ள இயக்குனராக இருந்தாலும் சரி அவரிடம் மூன்று வருடத்திற்கு கால்சீட் கிடையாதாம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். ஆனால் விக்ரம் வேதா எனும் காலத்தால் அழியாத கேங்க்ஸ்டர் காவியம் கொடுத்த புஷ்கர் காயத்ரி ஆகியோர் கதை கூறிய உடனே விஜய் சேதுபதி ஓகே சொல்லிவிட்டாராம்.
இவ்வாறு அவர் சம்மதம் தெரிவித்தது மட்டுமில்லாமல் உங்கள் திரைப்படம் எப்பொழுது ஆரம்பிப்பீர்கள் என்று கூறுங்கள் அதற்காக தன்னுடைய கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம் என விஜய் சேதுபதி கூறியது பல இயக்குனர்களுக்கு செம கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் பாலிவுட்டில் அதிக அளவு கமிட்மெண்ட் இருக்கிறது ஆகையால் அவர்கள் இந்த திரைப்படத்தை இயக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆகி விடும் அதனால் தான் விஜய் சேதுபதி ஓகே கூறி உள்ளார் என தெரியவந்துள்ளது.