‘லியோ’ படத்தில் இவ்வளவு பெரிய பெண்ணுக்கு அப்பாவாக நடிக்கிறாரா நடிகர் விஜய்.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

விஜய் நடிப்பில் உருவாகி வரும் அனைத்து படங்களும் மிகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று வரும் நிலையில் தற்போது விஜய் தன்னுடைய 67ஆவது படமான லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 24 வயது பெண்ணிற்கு அப்பாவாக நடிக்க இருக்கும் நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் வெளிவந்து கலவை விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்த படத்தினை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பட குழுவினர்கள் அனைவரும் காஷ்மீரில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த படத்தில் திரிஷா நடித்து வரும் நிலையில் இவர் தொடர்ந்து படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரை அடுத்து இயக்குனர் மிஷ்கின் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இவருடைய காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

எனவே இவர் சென்னை திரும்பிய மிஷ்கின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது காட்சி படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்திருந்தார். மேலும் இதனை அடுத்து இந்த படத்தில் அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஸ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மனோபாலா, சஞ்சய் தாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஜனனி லியோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் செல்ல பிள்ளையாக பிரபலமடைந்து இருக்கிறார். இவர் லியோ திரைப்படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியான நிலையில் இவர்தான் விஜய்க்கு மகளாக நடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது.

சமீப பேட்டியில் ஜனனியிடம் தொகுப்பாளர் விஜய் உங்களுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறாராமே என கேட்டதற்கு அவர் அந்த தகவலை சொல்ல அனுமதி இல்லை என மழுப்பிய நிலையில் பிறகு அனைவரும் இவர்தான் விஜயின் மகளாக நடிக்கிறார் என உறுதி செய்து இருக்கின்றனர். ஜனனிக்கு தற்பொழுது 24 வயது ஆகும் நிலையில் இவ்வளவு பெரிய பெண்ணுக்கு விஜய் அப்பாவாக நடிக்கிறாரா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment