நடிகர் சூர்யா பட நடிகைக்கு இப்படி ஒரு திறமையா? இதுவரையிலும் தெரியாம போச்சே.! வைரலாகும் வீடியோ.

தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் ஸ்பைடர் திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

பிறகு கடைசியாக சூர்யா நடிப்பில் வெளிவந்த என்ஜிகே திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இவர் தனது 18 வயதில் மாடலிங்காக தனது கெரியரை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு தமிழில் செல்வராகவன் இயக்கி இருந்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம்  தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

பிறகு தமிழ்,இந்தி, கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இவர் தற்போது தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பெரிதாக தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தான் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம்  இவருக்குப் பெரும் பிரபலத்தை தந்தது.

இந்நிலையில் தொடர்ந்து ராகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் சமையல் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இப்படி ஒரு திறமையா என்ற கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

Leave a Comment