மீண்டும் அடல்ட் காமெடி, ஹாரர் உருவாகிறது இருட்டு அறையில் முரட்டு குத்து 2.! இயக்குனர் அதிரடி

0

கடந்த வருடம் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து, இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன், யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, சாரா, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன், பாலா சரவணன், ஜான்விஜய், மதுமிதா என பலர் நடித்திருந்தார்கள்.

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் முதன்முதலில் ஹர ஹர மஹாதேவி என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து மீண்டும் அடல்ட் திரைப்படமான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கினார், இந்த திரைப்படத்தை ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரித்தது.

மேலும் இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு தொடங்கியுள்ளார்கள், இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது, அதுமட்டுமில்லாமல் புதுமுக நடிகர் மற்றும் நடிகைகள் உடன் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக படத்தின் இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார், இந்த திரைப்படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.