இதுவரை 10-வதே படிக்காத கிராமத்தில் முதல் முறையாக 12-வது தேர்ச்சி பெற்ற பழங்குடி பெண்.! எங்கு தெரியுமா

தற்போதெல்லாம் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக படித்து வருகிறார்கள். தற்பொழுது படிக்காதவர்கள் என்று எவருமில்லை அனைவரும் படித்து வருகின்றனர்.அதுவும் முக்கியமாகா அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கேலமங்கலம் அருகே உள்ளது இருளர்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் பழங்குடியினர்கள் வசித்து வருகின்றார்கள். இக்கிராமத்தில் பத்தாம் வகுப்பு வரை கூட படிக்க மாட்டார்களாம் சில காலங்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றுவிட்டு விரகு சேகரிப்பது, கூலி வேலை செய்வது மற்றும் ஆடு,மாடு மேய்த்தல் போன்ற குடும்ப வேலைகளை தான் செய்த வருவார்களாம்.

இக்கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பெண்களைப் படிக்க வைத்து திருமணம் செய்து விடுவார்களாம். இந்த நிலையில் பழங்குடியினர் இருளர்பட்டி கிராமத்தில் உள்ள முனிராஜ், நாகம்மா என்ற தம்பதியருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் என மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். அதில் இவருடைய மகன் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாராம். இவருடைய மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பு மட்டுமே  படித்துவிட்டு திருமணம் செய்து வைத்து விட்டார்களாம்.

இந்த நிலையில் இவர்களுடைய கடைசி மகள் கிருஷ்ணவேணி பாலக்கோடு விடுதியில் தங்கி திருமல்வாடி அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார் அந்த வகையில் தற்போது இவர் 295 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்தநிலையில் அந்தப் பழங்குடியினர் வாழும் கிராமத்தில் முதல் முறையாக இப்பெண் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதை அறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா அவர்கள் கிருஷ்ணவேணியை நேரடியாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் மேலும் படிக்க பண உதவியும் வழங்கியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version