இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுதான்.!! அட கன்றாவிய இருக்கே.

0
Iruttu-Araiyil-Murattu-Kuthu
Iruttu-Araiyil-Murattu-Kuthu

irruttu arayil murattu kuthu part 2 movie title:இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் யாஷிகா ஆனந்த் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படத்தில் வருகின்ற வாசகங்களை காது கொடுத்து கேட்க முடியாது அளவுக்கு டபுள் மீனிங்கில் பேசி இருப்பார்கள்.

இந்த படத்தை பார்க்க இளைஞர்கள் கூட்டம் குவிந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகி ரசிகர்களை ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி கசிந்தது. அதனை உறுதி  செய்யும் வகையில் அந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக அவரே  நடிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு இரண்டாவது குத்து என பெயரிட போவதாகவும் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஷாலு ஷம்மு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்னும் சில பிரபலங்கள் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் முதல் பாகத்தை விட சிறப்பாக எடுக்கப்பட்டு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல்  இந்த படம் முழுக்க முழுக்க இளைஞ்சர்களை குறிவைத்து எடுக்கப்பட உள்ளதாம். இந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளனர்.