சிறு குழந்தை என்று கூட பார்க்காமல் தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்.! ஆத்திரத்தை வெளிப்படுத்திய இர்பான் பதான்

0

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, இந்த ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெற வில்லை ஏன்னென்றால் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவியதால் ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த சாத்தியமில்லை என கிரிக்கெட் வாரியம் அறிவித்து விட்டது அதனால் ஐபிஎல் போட்டி வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் போட்டியில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் சிஎஸ்கே அணி என்று கூறலாம், அந்தளவு அதிக ரசிகர் பட்டாளத்தை பெற்று இருந்தது ஆனால் இந்த முறை csk அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இதுவரை நடந்த போட்டிகளில் சிஎஸ்கே அணி இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, நேற்று நடந்த போட்டிகளிலும் கூட சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்துள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தோனி மகளுக்கு சமூகவலைதளத்தில் மர்ம நபர் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளது காட்டு தீ போல் பரவி வருகிறது.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வழக்கம்போல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, அதனால் csk அணியின் கேப்டன் தோனியின் ஐந்து வயது மகள் ஷிவாவுக்கு இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளது சமூக வலைதளமே கொந்தளித்துள்ளது, இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தோனியின் மகள் #ziva என்ற ஹாஸ் டேக்கும் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இதுகுறித்து இர்பான் பதான் தன்னுடைய அதிரடி பதிலை வெளிப்படுத்தியுள்ளார், அதில் அவர் கூறியதாவது வீரர்கள் அனைவருமே தங்களின் சிறப்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்துகிறார்கள். சில நேரங்களில் சொதப்பல் ஆகிவிடுகின்றன.

அதனால் ஒரு சிறு குழந்தையை மிரட்டும் அதிகாரம் இந்த உலகில் யாருக்கும் கிடையாது என தெரிவித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் மனநிலை மரியாதை என்பவற்றை பற்றியும் ஹாஸ் டேக்கில்  குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன் தோனியின் மனைவி சாக்ஷிசியையும் பகிரங்கமாக மிரட்டி சமூகவலைதளத்தில் பதிவுகள் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.