டீசர் அறிவிப்பிற்கே ஒரு மார்க்கமான வீடியோவை வெளியிட்டு அதகளபடுத்திய இரண்டாம் குத்து படக்குழு.! வைரலாகும் வீடியோ

0

தமிழ் சினிமாவில் அடல்ட் கலந்த காமெடி திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்கள் அதிகரித்து வருகிறார்கள், அந்த லிஸ்டில் முதல் ஆளாக இருப்பது சந்தோஷ் பி ஜெயக்குமார்.

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகிய ஹர ஹர மகாதேவி திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அதனைத் தொடர்ந்து மீண்டும் அடல்ட் காமெடி திரைப்படமாக இருட்டு-அறையில்-முரட்டு-குத்து திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு எடுத்தார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக் நடித்திருந்தார், ஆனால் இதன் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஹீரோவாக நடித்து வருகிறார், சமீபத்தில் இரண்டாம் குத்து போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனென்றால் வாழைப்பழத்தை பிடித்தவாறு போஸ் கொடுத்து இணையதளத்தை ஒரு ஆட்டம் காண வைத்தார், அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்கள நெகட்டிவ் விமர்சனம் கொடுத்தார்கள், என்னதான் இரண்டாம் குத்து போஸ்டரை ரசிகர்கள் வெறுத்தாலும்  படத்தை பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு இரண்டாம் குத்து டீசர் வெளியாக இருக்கிறது இதனை நடிகர் ஆர்யா வெளியிட இருக்கிறார்.

டீசர் வெளியிடுவதற்கு ஒரு மார்க்கமான வீடியோவை படக்குழு கிரியேட் செய்து அதனை வெளியிட்டுள்ளார்கள்.

இதோ அந்த வீடியோ