சர்ச்சைகளைக் கிளப்பிய இரண்டாம் குத்து திரைப்படம் எப்படி இருக்கு.! இதோ விமர்சனம்.!

0

தமிழ் சினிமாவில் அடல்ட் ஹாரர் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார், இவர் தமிழில் முதன்முதலாக ஹர ஹர மகாதேவி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டவர் அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தையும் இயக்கினார்.

இந்த திரைப்படம் இரண்டும் வெற்றி பெற்றதால் அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு எடுத்தார், அந்த திரைப்படத்தில் ஹீரோவாக சந்தோஷ் பி ஜெயக்குமார் அவர்களை நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் டேனியலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் கதை.

இரண்டாம் குத்து திரைப் படத்தின் ஹீரோவான சந்தோஷ் மற்றும் அவருடைய நண்பர் டேனியல் இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது இருவரும் சந்தோஷமாக இருக்க தாய்லாந்துக்கு சுற்றுலா செல்கிறார்கள் அங்கு ஒரு வீட்டை வாடகை எடுக்கிறார்கள்.

அங்குதான் வெடிக்கிறது பிரச்சனை அந்த வீட்டில் ஒரு பேய் இருக்கிறது தீராத ஆசையினால் செத்துப் போன அந்த பேய் எப்படியாவது சந்தோஷ் மற்றும் டேனி கூட இணைந்துவிட வேண்டும் என அதிக ஆசையில் பேய் இருக்கிறது.

அப்படி இணைந்துவிட்டால் இருவரும் இறந்துவிடுவார்கள் என்பது தெரிந்த விஷயம் அதனால் எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து மீள வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் சந்தோஷ் மற்றும் டேனி. இதுதான் இரண்டாம் குத்து திரைப்படத்தின் கதை.

படத்தை பற்றி

இந்த திரைப்படத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார் மற்றும் டேனியல் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள், இவர்களுக்கு ஜோடியாக நடித்த நாயகிகள் மற்றும் பேய் ஆகியோர்கள் மிகவும் கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் இசை எல்லாமே சுமார் தான் என்று கூற வேண்டும், இந்த திரைப்படத்தில் இரட்டை அர்த்தங்கள் நேரடியாக பேசப்பட்டுள்ளன கொஞ்சம் இலைமறை காயாக பேசியிருந்தால் படத்தை வெறுத்து இருக்கமாட்டார்கள் ரசிகர்கள்.

படத்தை குடும்பத்துடன் பார்க்கவே முடியாது நண்பர்களுடன் மட்டும்தான் பார்க்க முடியும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது இரண்டாம் குத்து திரைப்படம்.