ஹர ஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கியவர் தான் சந்தோஷ் பி ஜெயக்குமார், இவர் தற்போது இரண்டாம் குத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார், இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏனென்றால் போஸ்டர் ஆபாசத்தின் உச்சமாக இருந்தது, இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டுமில்லாமல் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
ஏனென்றால் இந்த டீசரில் ஆபாசத்தின் உச்சம் காட்சிகளும் ஆபாசமாக பேச்சுகளும் இடம்பெற்றுள்ளன அதனால் பல சினிமா பிரபலங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இயக்குனர் மற்றும் நடிகருமான பாரதிராஜா தன்னுடைய கண்டனத்தை சமூக வலைதளத்தின் மூலம் பதிவிட்டார், அந்த அறிக்கையில் பாரதிராஜா இலைமறைகாயாக எதை வேணாலும் காட்டுங்கள் ஆனால் இப்படி ஆபாசத்தின் உச்சமாக காட்டாதீர்கள் என கூறியுள்ளார். ஆனால் அந்த கண்டனத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு படத்திற்கு புரமோஷன் தேடி வருகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
அதுமட்டுமில்லாமல் பாரதிராஜாவை கிண்டல் செய்யும் விதமாக அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கார்த்தி மற்றும் ராதா காட்சி ஆபாசமாக இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பாரதிராஜாவை கேலி செய்யும் விதமாக யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ளே வை என கமெண்ட் செய்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
ஒருபக்கம் இவர்களின் சண்டை வலுத்து போக மற்றொரு பக்கம் இதுபோல் திரைப்படம் வெளியானால் சினிமாவெ அழிந்துவிடும் என கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள், ஏனென்றால் சரியாக கூட்டம் வராத திரையரங்கில் மலையாளத் திரைப்படத்தை ஒளிபரப்பி லாபம் காண்பார்கள், அதேபோல் ஒரு சில வருடங்களிலேயே அந்த திரையரங்கு மூடப்பட்டு விடும் அந்த நிலைமை தான் தமிழ் சினிமாவிற்கு வந்து விடக்கூடாது என பயப்படகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இந்த நிலையில் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது இரண்டாம் குத்து திரைப்படம். அதனால் இனி சந்தோஷ் ஜெயக்குமார் திரைப்படத்திற்கு இனி யாரும் ஒத்துழைப்பு கொடுக்க கூடாது எனவும், அதேபோல் பெப்சி தொழிலாளர்கள் யாரும் சந்தோஷ ஜெயக்குமார் திரைப்படத்தில் பணியாற்றக் கூடாது எனவும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் இனி சந்தோஷ்குமார் திரைப்படம் எடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.