போதும்டா சாமி இனி இந்த மாதிரி படத்தில் நடிக்கவே மாட்டேன் இரண்டாம் குத்து திரைப்படத்தில் நடித்த நடிகர் அதிரடி முடிவு.!

0

சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஹர ஹர மஹாதேவி இந்த திரைப்படம் அடல்ட் கலந்த காமெடி திரைப்படமாக வெளியானது, அதனால் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து வெற்றி அடைந்தது இதனைத்தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் அடல்ட் கலந்த திரைப்படத்தை இயக்கினார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

அந்த திரைப்படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இந்த திரைப்படம் இளசுகள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது, இப்படி அடல்ட் கலந்த ஹாரர் திரைப்படம் வெற்றி பெற்றதால் மீண்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு எடுத்தார் சந்தோஷ் பி ஜெயக்குமார.

இந்த இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் திரைப்படத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைத்து இயக்கினார் சந்தோஷ் பி ஜெயக்குமார், முதல் பாகத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்தார், இந்த இரண்டாம் பாகத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது அதுமட்டுமில்லாமல் இந்த டீசர் மற்றும் போஸ்டரில் ஆபாசம் நிறைந்த காட்சிகள் இருந்ததால்படத்திற்கு எதிர்ப்பு நிலவி வருகிறது, டீசரை பார்த்த பாரதிராஜா இந்த படத்தை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதிலளித்த சந்தோஷ் பி ஜெயக்குமார் கமல் திரைப்படத்தில் நீங்கள் மட்டும் உங்கள் படத்தின் நடிகை நீச்சல் குளத்தில் காட்டலாமா என கருத்து தெரிவித்தார் அதன் பிறகு சந்தோஷ் பி ஜெயக்குமார் பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டார்.

மேலும் சந்தோஷ் பி ஜெயக்குமார் அடல்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் பாலிவுட் படங்களில் ஹாலிவுட் படங்களில் சீரியஸ் டிவிகளில் கம்ப்யூட்டர்களில் OTT தளங்களில் என தாராளமாக வந்து கொண்டிருக்கின்றன அதேபோல் ஒரு விஷயத்தை தான் படமாக எடுத்து சென்சார் அனுமதியோடு வெளியிடுகிறேன் மற்றவையெல்லாம் அனுமதித்த நீங்கள் என் படத்திற்கு மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கேட்டிருந்தார்.

நடிகர் சாம்ஸ் அதிரடியாக ஒரு முடிவு எடுத்துள்ளார் அவர் கூறியதாவது சந்தோஷ் பி ஜெயக்குமார் சொல்வதைப்போல் ஹாலிவுட் பாலிவுட் ott என பல வகையில் இதுபோல் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன அதையெல்லாம் திருத்த வேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஆனால் அதையெல்லாம் சரி செய்யும் பொருட்டு இதுவரை அதற்காக எந்த ஒரு முயற்சியும் எடுத்ததில்லை, குரலும் கொடுத்ததில்லை குறைந்தபட்சம் ஒரு எதிர்ப்பு கூட நான் தெரிவித்ததில்லை, மற்றவர்கள் செய்த தவறை இயக்குனர் சொல்வது போல் கண்டும் காணாமல் தான் போய் இருக்கன்.

அதைத்தாண்டி இவர் படத்தில் வேறு நடித்துள்ளேன், அப்படியிருக்கையில் இவரை ஏன் இப்படி ஒரு படம் எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்கும் தகுதி எனக்கு கிடையாது, இதுவரை நான் நடித்த திரைப்படங்களில் கண்ணியமாக தான் நடித்துள்ளேன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் படி தான் நான் நடித்துள்ளேன், ஏ சர்டிபிகேட் வரப்போகிறது இதில் என்ன இருக்கிறது நடித்தால் என்ன என்று தான் இந்த திரைப்படத்தில் நடித்தேன். ஆனால் இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை.

ரசிகர்களிடம் இதுபோன்ற படங்களுக்கு ஆதரவும் இருக்கிறது, இருந்தாலும் சுய ஒழுக்கம் சிறந்தது என்பதை மனதில் கொண்டு இனி இரண்டாம் குத்து போன்ற திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளார்.