முழுக்க முழுக்க இரட்டை அர்த்தத்தில் வெளியான இரண்டாம் குத்து படத்தின் சிங்கிள் ட்ராக்.! அடப்பாவிகளா அதுக்குன்னு இப்படியா பாடல் எழுதுவீங்க

தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி திரைப்படங்களை இயக்கி வருபவர்களில் சந்தோஷ் பி ஜெயக்குமார் என்பவரும் ஒருவர், இவர் முதன்முதலில் ஹர ஹர மகாதேவி என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தை மீண்டும் அடல்ட் காமெடி ஜானரில் இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், அது மட்டுமில்லாமல் பல விமர்சனங்கள் எழுந்தாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படத்தை பி சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி வருகிறார், படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் பிரபலமான டேனி  மொட்டை ராஜேந்திரன், ஷாலு ஷம்மு என பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள், அந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது அது மட்டுமில்லாமல் பல பிரபலங்களும் முகம் சுளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இருந்து சிங்கிள் ட்ராக் ஒன்று வெளியாகி மேலும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் பாடல் முழுவதும் இரட்டை அர்த்தத்தில் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதோ அந்த பாடல்.