இறைவன் திரைப்படத்தை கட்டாயம் திரையரங்கில் தான் பார்க்க வேண்டும் அதற்கான 5 காரணங்கள்.!

Iraivan : செப்டம்பர் 28ஆம் தேதி எத்தனையோ திரைப்படங்கள் வெளியானாலும் ஹிட் அடிக்கும் திரைப்பட லிஸ்டில் இறைவன் திரைப்படம் முத்திரை பதிக்க இருக்கிறது, ஏனென்றால் இந்த திரைப்படத்திற்கு “ஏ” சான்றிதழ் கிடைத்துள்ளது இருந்தாலும் இந்த திரைப்பட முன்பதிவு டிக்கெட் பல்வேறு இடங்களில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது அதனால் கட்டாயம் இந்த திரைப்படத்தை திரையில்தான் காண வேண்டும்.

அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இறைவன் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி நகரத்தில் நடக்கும் கொடூரமான கொலைகளை கண்டுபிடிக்கும் விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். என்ன தான் ஜெயம் ரவி பல திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் போஸ்  இறைவன் திரைப்படத்தில் மன நோயாளி போல் சைக்கோ கொலையாளியாக நடித்துள்ளார் ராகுல் போஸ். மேலும் ப்ரோமோஷன் வீடியோக்களில் இவரை மிகவும் கொடூர வில்லனாக காட்டியுள்ளார்கள் தமிழ் சினிமாவிற்கு திரும்பிய பாலிவுட் நடிகர் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய முத்திரையை பதிக்க இருக்கிறார்.

இயக்குனர் அகமது இதுவரை சினிமாவில் நகைச்சுவை, நீதி ஆகிய திரைப்படங்களை இயக்கி வந்தவர் இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக சைக்கோ திரில்லர் கதையை கையில் எடுத்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் அகமது திரில்லர் இயக்குனர் என்ற பெருமையை அடைய இருக்கிறார்.

இறைவன் திரைப்படம் மறைக்கப்பட்ட கதை திருப்பத்தை கொண்டுள்ளது அது மட்டும் இல்லாமல் நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் வெளிப்படையாக இருக்கிறது. பெண் கதாபாத்திரம் குறித்து தலைமை போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆஷிஷ் வித்யார்த்தி இன்னும் படத்திற்கு வலு சேர்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இறைவன் திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் அதனால் பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா நல்ல ஸ்கோர் பண்ணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை திரையரங்கில் பார்த்தால் மட்டுமே நமக்கு பார்த்து அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது.