திரையரங்கில் ரசிகர்களின் அலறல் சத்தம்.! சைக்கோ கதையில் ஜெயம் ரவி மிரட்டினாரா..? இறைவன் முழு விமர்சனம்.!

Iraivan : ஜெயம் ரவி நயன்தாரா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் இறைவன். இந்த திரைப்படத்தை அகமது இயக்கியுள்ளார், இதற்கு முன்பு இவர் வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இந்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ராகுல் போஸ், நரேன், ஆஷிஷ் வித்யார்த்தி, விஜயலட்சுமி, வினோத் கிஷன், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இறைவன் திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கே காணலாம்.

கதை:

இறைவன் திரைப்படம் சைக்கோ திரில்லர் திரைப்படமாக வெளியாகி உள்ளது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் படம் முழுக்க கொடூர காட்சிகள் அதிகமாக இருந்தது அது மட்டும் இல்லாமல் காட்சிகளை பார்த்த சென்சார் குழு ஏ சான்றிதழ் கொடுத்திருந்தது. இந்த நிலையில் இறைவன் திரைப்படத்தின் கதை என்ன என்று இங்கே காணலாம்.

படத்தின் ஆரம்பத்தில் மனிதன் மிகவும் ஆபத்தான விலங்கு என்ற காட்சிகளுடன் தொடங்குகிறது இந்த முதல் காட்சியிலேயே படத்தின் மொத்த கதையும் தெரிந்து விடுகிறது. பொதுவாக தப்பு பண்றவங்களை கடவுள் தண்டிக்கும் வரை காத்திருக்காமல் தன்னைத்தானே கடவுள் என நினைத்துக் கொண்டு என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி மிரட்டியுள்ளார். அதேபோல் தன்னை கடவுளாக நினைத்துக் கொண்டு பல கொலைகளை செய்யும் ராகுல் போஸ்க்கும் ஜெயம் ரவிக்கும் நடக்கும் யுத்தமே படத்தின் கதை.

சென்னையில் அடுத்தடுத்த இளம் பெண்கள் மிக கொடூரமாக கண்களை பறித்தும் கால்கள் வெட்டியும், கைகளை வெட்டியும் கொலை செய்கிறார்கள் இதையெல்லாம் பிரம்மா என்னும் சைக்கோவில்தான் கொலை செய்து கொண்டிருக்கிறார் அந்த நபரை பிடிக்க காவல்துறை அதிகாரிகள் போராடி வருகிறார்கள் அந்த சமயத்தில் அர்ஜுன் அவருடைய நண்பர் ஆண்ட்ரூ டீம் முயற்சி செய்கிறது.

இவர்களின் வலையில் சைக்கோ கொலைகாரன் பிரம்மா சிக்க ஆண்ட்ரு உயிரிழந்து விடுகிறார் இதனால் மன அழுத்தத்தின் காரணமாக போலீஸ் வேலையில் இருந்து ஒதுங்கி விடுகிறார் ஜெயம் ரவி ஒரு காலகட்டத்தில் போலீஸில் இருந்து பிரம்மா தப்பித்து மீண்டும் முன்பை விட அதிக கொலைகளை செய்கிறார் இதன் காரணமாக ஜெயம் ரவி சுற்றி இருப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் இதனால் போலீஸ் துறை விழி பிதுங்கி நிற்கிறது.

கடைசியாக சைக்கோவின் பிரம்மா சிக்கினாரா அவரின் நோக்கம் தான் என்ன என்பதை திரில்லரில் மிரட்டும் வகையில் திரைக்கதையை கொடுத்துள்ளார் அகமது.

படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள் யாரையும் குறை சொல்லும் அளவிற்கு நடிக்கவில்லை அந்த அளவு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள் மேலும் ஆக்ரோஷம், இயலாமை, இழப்பு என அனைத்தையும் வெளிப்படுத்தும் விதமாக படத்தில் காட்டி உள்ளார்கள்.

அதேபோல் படத்தில் வில்லனாக நடித்துள்ள ராகுல் போஸ் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மைலி கில்லர் பார்ப்பதற்கே கொடூர வில்லனாக மிரட்டி உள்ளார் அதுமட்டுமில்லாமல் பார்வையாலே ரசிகர்களை மிரள வைக்கிறார். அவரை தொடர்ந்து நயன்தாரா, சார்லி, நரேன், அழகம்பெருமாள், பகவதி பெருமாள் என பலரும் நடிப்பில் மிரட்டி உள்ளார்கள்.

படத்தின் கதை வழக்கமான பல சைக்கோ திரில்லர் கதையாக இருந்தாலும் திரையரங்கில் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிர வைத்துள்ளார்கள் படம் முழுக்க கதையோடு ஒன்றி இருக்கிறது ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்துள்ளார் இயக்குனர் அகமது இடைவெளி காட்சியை பார்த்த ரசிகர்கள் பிரமித்தார்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்றால் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை தான் ஆனால் பாடலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

படத்தில் பாராட்ட வேண்டிய பல விஷயங்கள் இருந்தாலும் மைனஸ் என்பது படம் நீண்ட நேரம் பார்ப்பது போல் ஒரு உணர்வை உண்டாக்குகிறது அதேபோல் லாஜிக் மீறல்கள் சில காட்சிகளில் இருக்கிறது அதனை எடிட் செய்து இருக்கலாம் சைக்கோ வில்லனுக்கு இளம்பெண்கள் தான் டார்கெட்டா என தோணும் அளவிற்கு படம் மிரட்டலாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் படத்தை பார்த்துவிட்டு பெண்கள் இரவில் தனியாக செல்லமுடியாத  வகையில் பயத்தை காட்டி உள்ளார் இயக்குனர்.

படத்தை பலவீனமானவர்களும் குழந்தைகளும் நிச்சயம் பார்க்கக் கூடாது அதுதான் அவர்களுக்கு நல்லது என தோன்றுகிறது.