கர்ணன் திரைப்படத்தைப் பார்த்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் அதிரடி பதிவு.! என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக விருது வாங்கிய நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தை  இயக்கி முடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகி  ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கர்ணன் திரைப்படத்தில் ரஜிஷா விஜயன், யோகிபாபு, லக்ஷ்மி பிரியா, கௌரி கிருஷ்ணன், நட்டி ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். அதுபோல்  இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் என்றே கூற வேண்டும். இந்தநிலையில் பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் அந்தப் பாடலின் வரிகளை மாற்றி அமைத்தார் மாரிசெல்வராஜ். இப்படி படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்தது கர்ணன் திரைப்படம்.

மேலும் 50 சதவிகித இருக்கைகளுடன் வெளியாகிய கர்ணன் திரைப்படம் வசூலில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கல்லா கட்டி வருகிறது. இந்த கர்ணன் திரைப்படம் 1995 இல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியன்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது அதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தார்கள் இதன் பின்னணியாக வைத்து தான் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் தனுஷ் தனது சிறந்த நடிப்பை வழக்கம்போல் வெளிப்படுத்தியுள்ளார் அதேபோல் தனுஷிற்கு நிகராக யோகிபாபு, நட்டி, கௌரி கிஷன் ஆகியோர்கள் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்கள்.

கர்ணன் திரைப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் சமூகவலைதளத்தில் தங்களின் பாராட்டுகளை கருத்தாக பதிவிட்டு வருகிறார்கள் இந்த நிலையில் கர்ணன் படத்தை பார்த்து ரசித்த திருப்பத்தூர் எஸ்பி விஜயகுமார் ஐபிஎஸ் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது கர்ணன் நியாயமற்ற அநீதிக்கு எதிராக கிளிர்ந்த எழுகிறான் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் சக்தி வாய்ந்த படம். கர்ணன் உறுதியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம் என குறிப்பிட்டுள்ளார். இதனை ஒரு ஐபிஎஸ் அதிகாரியே கூறியது தனுஷ் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

Leave a Comment