ஐபிஎல்-லில் பவர் பிளேயர் கான்செப்ட் அறிமுகம்.! 15 வீரர்களுடன் களமிறங்க போகிறது ஐபிஎல் டீம்.!

0
IPL
IPL

கங்குலி பிசிசிஐ பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், அந்தவகையில் இந்தியா முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்த மாதம் நடைபெற இருக்கிறது,. இந்தநிலையில் 2020ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் சீசனில் புதிய மாற்றத்தை கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டம் ஏனென்றால் போட்டித் துவங்குவதற்கு முன்பு 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும் ஆனால் மைதானத்தில் பதினொரு வீரர்கள்தான் ஆடுவார்கள், ஆனால் போட்டியின்போது தேவைப்படும் சமயத்தில் அம்பியாரிடம் கூறிவிட்டு கேப்டன் மாற்று வீரரை இறக்கிக் கொள்ளலாம், அந்த மாற்று வீரர் பவர் பிளேயர், விக்கெட் விழும் சமயத்தில் அல்லது ஓவர் முடிந்த பின்பு இந்த மாற்று வீரரை நிர்வாகம் இறக்கலாம்.

இந்தப் புதிய மாற்றத்தை 2020 சீசனில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள், இருந்தாலும் முன்னதாக நம் லோக்கல் டி20 போட்டியான முஷ்டாக் காலிக் கோப்பையில் ட்ரையல் பார்க்க இருக்கிறார்கள், அதேபோல் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது கடைசி ஓவர் மட்டும் ஆட ஹிட்டர் பேட்ஸ்மேன் இறக்கிக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் மற்ற டீம் பந்துவீச்சில் ஸ்பெஷலிஸ்ட் பவுலரை அவர்கள் இறக்கி விளையாடலாம்.

இந்த யுத்தியை கடைபிடித்தால் டீமுக்கு ஸ்டார்டஜி வகுக்க கடினமாகவும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும் அதுமட்டுமில்லாமல் சஸ்பென்ஸ் அதிகரிக்கும் வெளிநாட்டு வீரர்களை அசத்தலாக சப்ஸ்டிட்யூட் செய்யலாம். இருந்தாலும் ஐபிஎல் டீம் சம்மதிக்க வேண்டும் அதேபோல் ஒருமுறைதான் இந்த பவர் பிளேயர் சப்ஸ்டிட்யூட் செய்யலாமா அல்லது மூன்று முறை சப்ஸ்டிட்யூட் செய்யலாமா என்பது பிசிசிஐ அறிவித்த பின்பே தெரியும்.