கடினமான பாதையை கடந்து செல்ல கற்றுக்கொடுத்தது சிஎஸ்கே தான். தல தோனி உருக்கம்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் தல தோனி.

இந்த வருடம் ஐபிஎல் தொடர் வருகிற 29-ஆம் தேதி மும்பை வாங்கடே மைதானத்தில் தொடங்க இருக்கிறது, இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கிறது, ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி மே மாதம் 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், உலக கோப்பை அரையிறுதிக்கு பிறகு தோனி எந்த ஒரு போட்டியிலும் இடம்பெறவில்லை, ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதைக் கண்டு களிக்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தோனி சமீபத்தில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் இந்த பயணம் 2008 தொடங்கியது, களத்திலும் களத்திற்கு வெளியையும் ஒரு மனிதனாக கிரிக்கெட் வீரராக எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையை கற்றுக் கொள்ள உதவியாய் இருக்கிறது என்றார்,.

அதுமட்டுமில்லாமல் சென்னை ரசிகர்கள் யாரும் என்னை பெயர் சொல்லி அழைப்பது கிடையாது, தல என்றுதான் அழைக்கிறார்கள் தல என்று கூறும்பொழுது அவர்கள் கொடுக்கும் மரியாதையும் அன்பும் தான் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது என்று தோனி பேட்டியில் கூறினார்.

Leave a Comment