ஐபிஎல் பரிசுத்தொகை இவ்வளவுதான்.? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் திருவிழா விரைவில் தொடங்க இருக்கிறது, இதன் முதல் போட்டி 29ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது, இதில் மும்பை அணியும் சிஎஸ்கே அணியும் நேரடியாக களத்தில் மோத இருக்கின்றன, அதேபோல் கடைசி போட்டி மே மாதம் 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின் பரிசு தொகை தற்போது வெளியிடப்பட்டுள்ளது, கடந்த வருடம் ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு பரிசு தொகையாக 20 கோடியும், இரண்டாவதாக இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 12.5 கோடியும் வழங்கப்பட்டது, அதேபோல் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு தலா 8.75 கோடியும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான பரிசுத்தொகையை பிசிசிஐ பாதியாக குறைந்துள்ளது, அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 10 கோடியும் இரண்டாவதாக இடம் பிடிக்கும் அணிக்கு 6.25 கோடியும் வழங்கப்பட இருக்கிறது அதேபோல் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிக்கு 4.375 கோடி வழங்க இருக்கிறது பிசிசிஐ.

csk team
csk team

Leave a Comment