IPL : அகமதாபாத் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் மும்பை இந்தியன்ஸ் வீரர் – வெளிவந்த தகவல்.?

ஐபிஎல் 15-வது சீஸனில் 10 அணிகள்  விளையாட இருக்கின்றன இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் புதிதாக இரண்டு அணிகள் ஏலம் விடப்பட்டது அதில் அகமதாபாத் சிவீசி கேபிடல் 5600 கோடிக்கு வாங்கியது.  அதேபோல மற்றொரு அணியான லக்னோ அணியை சஞ்சீவ் கோயங்காவின் ஆர் பி எஸ் சி நிறுவனம் 7 ஆயிரத்து 90 கோடிக்கு கைப்பற்றியது.

இப்பொழுது மொத்தம் 10 அணிகள் என்பதால் bcci நிறுவனம் 8 அணிகள் இருக்கும் வீரர்களில் 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டது அதன்படி ஒவ்வொரு அணியும் தனக்கு பிடித்த நான்கு வீரர்களை தன்வசப்படுத்தின மீதி வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது.

புதிதாக இரண்டு அணிகள் உங்கள் திறமையின் மூலம் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என கூறியது அதன்படிஇரண்டு அணிகளும் ஒரு சில வீரர்களை வாங்க முயற்சித்து வருகிறது. ஆனால் இதுவரை சரியான விவரம் எதுவும் தெரியவில்லை ஆனால் அகமதாபாத் முக்கியமான மூன்று வீரர்களை குறிவைத்து உள்ளதாம் ஹர்திக் பாண்டியா, இஷன் கிஷன், ரஷித் கான் ஆகியவர்களை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ஹர்திக் பாண்டியா அகமதாபாத் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு அணிகளும் எந்த வீரரை வாங்கி உள்ளீர்கள் என்பதை ஜனவரி 15ஆம் தேதி யை குறிப்பிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.

வருகின்ற பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் ஏலம் நடக்கும் அதில் நீங்கள் அதன் மூலம் மீதி வீரரை வாங்கிக் கொள்ளலாம் என கூறி உள்ளதாம். எது எப்படியோ அகமதாபாத் அணிக்கு கேப்டனாக ஹர்டிக் பண்டியா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

Leave a Comment