அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் 13வது சீசன் வருகின்ற 29ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது, இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியன் மும்பை அணியும் மோத இருந்தது.

ஆனால் தற்பொழுது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் சர்வதேச விளையாட்டுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அதுமட்டுமில்லாமல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அதேபோல் மகராஷ்டிராவில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, டெல்லியிலும் போட்டி நடைபெற அம்மாநில அரசு தடை விதித்துள்ளது, அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு விதிக்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாட்டில் வெளிநாட்டு வீரர்கள் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதனால் ஐபிஎல் தொடரை ஆளில்லா மைதானத்தில் நடத்த திட்டமிட்டது ஆனால், இப்படி கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் இது போன்ற சூழ்நிலையில் ஐபிஎல் தொடர் நடைபெற்றால் அப்போட்டியின்  சுவாரசியத்தை குறைத்துவிடும் அதனால் இது பற்றி பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவெடுத்தார்கள்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள், ஏப்ரல் 15ஆம் தேதி ஐபிஎல் தொடங்கினால் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதால் எந்த ஒரு கட்டுப்பாடும் சிக்கலும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Comment