கிரிக்கெட்டில் சூதாட்டம்.! ஐபிஎல் போட்டியில் பிரபல வீரர் பணம் வாங்கியது அம்பலம்.!

0
74

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பிரிமியர் t20 லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், கர்நாடகாவிலும் நடந்து வருகிறது, அங்கு நடந்த ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சில வீரர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரித்து வந்த போலீஸ் ஜிஎம் கவுதம், அப்ரார் காஸி ஆகிய கிரிக்கெட் வீரர்களை நேற்று காலை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டார் ஜிஎம் கவுதம் பெல்லாரி டஸ்கஸ் அணியின் தலைவராக இருக்கிறார் அப்ரார் விக்கெட் கீப்பராக இருக்கிறார். இவர்கள் இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகா பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் பெல்லாரி மற்றும் ஹீப்பாளி அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது அந்த ஆட்டத்தில் பேட்டிங் செய்வதற்காக 20 லட்ச ரூபாயை இவர்கள் பெற்றதாகவும் மற்றொரு போட்டியின் முடிவை முன்பே தீர்மானிப்பதற்காக பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.

சூதாட்டப்புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜி.எம்.கவுதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை, பெங்களுர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.