கொரோனாவின் எதிரொலி.! ஐபிஎல் நிறுத்தப்படுமா.? கங்குலியின் அதிரடி பதில்

உலக நாடுகளையே கதிகலங்க வைத்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸுக்கு இந்திய நாடும் தப்பவில்லை இதுவரை இந்தியாவில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், நோய் அதிகமாக பரவி வருவதால் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடிந்த அளவு கூட்டமான பகுதிக்குச் செல்லாமல் தவிர்த்து கொள்ளவேண்டும் என உலக சுகாதார துறையில் இருந்து வலியுறுத்தப்படுகிறது.

அதேபோல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிரிக்கெட் மைதானம் ஒன்று, இந்த மாதத்தில் ஐபிஎல் போட்டி தொடங்க இருக்கிறது அதனால் இங்கு பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடுவார்கள், ஐபிஎல் போட்டி திருவிழா கோலாகலமாக மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த முறை கொரோனா  வைரஸ் அதிகமாக பரவி வருவதால் ஐபிஎல் தொடருக்கு பாதிப்பு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டி தேதி தள்ளி வைக்கப் பட வாய்ப்பு உள்ளதாக பலராலும் பேசப்பட்டது, ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் மைதானத்தில் ஒன்று கூடுவார்கள் அதனால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதால் ஓன்று ஐபிஎல் போட்டியை ரத்து செய்வார்கள் அல்லது தேதியை மாற்றுவார்கள் என கூறப்பட்டது.

இதுபற்றி விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ஐபிஎல் போட்டிகள் திட்டவட்டமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார், அதேபோல் கொரோனா பரவுவதை தடுக்க பிசிசிஐ தரப்பிலிருந்து தேவையான முன்னச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கங்குலி உறுதியாகத் தெரிவித்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் தடையின்றி நடைபெறும் என குறிப்பிட்ட கங்குலி தென் ஆப்பிரிக்கா அணியும் கிரிக்கெட்டில் பங்கேற்க இந்திய வர உள்ளதையும் தெரிவித்துள்ளார்.

கங்குலியின் இந்த பேச்சு ஐபிஎல் தொடருக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனத் தோன்றினாலும், உயிர் கொல்லியான கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து இறுதி முடிவை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment