காக்கி சட்டை போலீஸாக மிரட்டும் நந்திதா ஸ்வேதா IPC 376 லிரிக்ஸ் வீடியோ.!

nenitha
nenitha

தமிழ் திரை உலகில் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நந்திதா ஸ்வேதா. இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த நந்தா லவ்சு நந்திதா கன்னட திரை திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் 2012ம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார் என்று கூறவேண்டும் எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி போன்ற பல படங்களில் நடித்தார்.

நந்திதா அவர்கள் சில காலங்களாக படத்தில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் IPC 376 என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார் இப்படத்தை ராம்குமார் சுப்பராமன் இயக்கியுள்ளார் பிரபாகர் தயாரித்துள்ள இப்படத்தில் நந்திதா அவர்கள் கறாரான காக்கிசட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இருந்து கறாரான காக்கி சட்டை லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

நந்திதா அவர்கள் முறையாக போலீஸ் வேடத்தில் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.