மிரட்டலாக உருவாக உள்ள வலிமை ஆக்ஷன் காட்சிகள் வலிமையின் புதிய அப்டேட்கள்.!அடி ஒன்னும் இடி மாதிரி இருக்குமாமே.!

தமிழ் சினிமா உலகில் தன்னம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தல அஜித் இவர் சமீபத்தில் சட்டமன்ற தேர்தலில் ரசிகரின் செல்போனை பிடுங்கிய சம்பவம் அப்பொழுது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.

மேலும் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை தொடந்து தற்பொழுது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சமீபத்தில் படம் ஆரம்பிக்கும் போது தல அஜித் பைக்கில் ஸ்டெண்ட் செய்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

மேலும் தல அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வரும் என தயாரிப்பாளர் போனி கபூர் அவரிடம் கேட்டு வந்தபோது தல அஜீத்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வலிமை படத்தின் இன்னும் மீதம் உள்ள ஆக்ஷன் காட்சிகளுக்காக ஸ்பெயின் நாடு செல்ல படக்குழுவினர்கள் முடிவெடுத்துள்ளதாக தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது ஆம் இன்னும் ஆக்ஷன் காட்சிகளுக்காக ஸ்பெயின் நாடு செல்ல வேண்டும் என வினோத் உறுதியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ajith in valimai

அதுமட்டுமல்லாமல் தல அஜித் இந்த காட்சிகள் மட்டும் நடத்து விட்டால் படமே முடிந்து விடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

Leave a Comment

Exit mobile version