குணா படத்த இயக்கியது சந்தானபாரதி இல்லை.. ரிஸ்க் எடுத்த கமல்.. ஒளிப்பதிவாளர் சொன்ன ஷாக்கிங் தகவல்

Interview with venu about Gunaa film: குணா படத்தை இயக்கியது சந்தன பாரதி இல்லை என்பது குறித்து அப்படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியிருக்கும் உண்மை தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நான் மஞ்சுமல் பாய்ஸ். கடந்த 2022ஆம் தேதி வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்க சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து நடித்தனர்.

மேலும் இந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவானது. இப்படம் மலையாளத்தில் வெளியான முதல் நாளிலேயே பட்டய கிளப்பி மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. முழுக்க முழுக்க கொடைக்கானல் பகுதிகளில் உருவாக்கப்பட்ட படத்தில் குறிப்பாக குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் குணா இந்த படத்தின் பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

ரஜினியின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடும் நடிகர் லிவிங்ஸ்டன்.. மனைவியின் உயிரை காப்பாற்றிய தெய்வம்

கமல்ஹாசனின் குணா படத்தில் ஒரு குகை வரும் அதனால் இந்த படத்திற்கு குணா குகை என பெயர் வைக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றது. இதனால் இந்த படங்கள் குறித்து பெரிதளவிலும் பேசப்பட்டது.

அந்த வகையில் இந்த படத்தை இயக்கியது சந்தான பாரதி இல்லை என்று அந்த படத்தின் வேணு அளித்திருக்கும் பேட்டி பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவர் கூறியதாவது, குணா படம் எடுக்கும் பொழுது அதனுடைய ஆபத்துக்கள் எங்களுக்கு தெரியாது என்று சந்தன பாரதி கூறியிருக்கிறார்.

இதனை சொன்னதும் அது அவருக்கு தெரியாது ஏனென்றால் குணா படத்தை இயக்குனர் அவர் கிடையாது கமல் தான் அதை செய்தார். பெரும்பாலான காட்சிகளில் சந்தான பாரதி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர கூட மாட்டார் குறைந்த நபர்களை வைத்து நாங்கள் படத்தை செய்தோம் குணா குகைக்கு வராமலேயே அதனுடைய ஆபத்து பற்றி அவருக்கு எப்படி தெரியும் என்று கூறியுள்ளார்.