‘ஜெயிலர்’ படத்தால் விஜய்யே பயந்து போயிட்டாரு.. லியோ படத்துக்கு வந்த சோதனை.! உண்மையை உடைத்த பிரபலம்

rajini-vijay
rajini-vijay

Rajini – vijay: ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வசூலை குவித்து வரும் நிலையில் இதனை பார்த்து நடிகர் விஜய்யே பயந்து இருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் அழைத்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜெயிலர் படம் வெளியான 6 நாட்களில் விக்ரம் படத்தின் வசூலை நெருங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் இதன் காரணமாக நடிகர் விஜய்க்கு லியோ பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

அண்ணாத்த, தர்பார் போன்ற படங்களின் கதை சரியில்லாத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஜெயிலர் படத்தின் கதை சுமாராக இருந்தாலும் மொக்கையாக இல்லாத காரணத்தினால் விஜய் vs ரஜினி பஞ்சாயத்து காரணமாகவும் மக்கள் மாற்றியுள்ளனர்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சரத்குமார் பேசியது விஜய்க்கு ஃபேவராக அமையும் என நினைத்தனர் ஆனால் அது ரிவர்ஸ் ஆகி திரும்பிடுச்சு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு பலமாகவும், பாக்ஸ் ஆபிஸ் வசூலாகவும் மாறிவிட்டது  என வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கமலஹாசனின் விக்ரம் மற்றும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் வெளியாகி பெரிய வசூல் வேட்டையை நடத்தியது எனவே ஜெயிலர் படத்திற்கு பெரிய பிரஷர் இருந்தது ஆனால் அந்த படத்தின் பிரஷரை சன் பிக்சர்ஸ் பக்குவமாக பார்த்துக் கொண்டதால் இந்த இரு படங்களின் வசூலை முறியடிக்கும் அளவிற்கு ஜெயிலர் உள்ளது.

இந்த வருஷம் ஆரம்பத்தில் அஜித் உடன் போட்டி போட்ட நிலையில் வாரிசு படத்தால் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த முடியவில்லை. அந்தப் படத்தின் கண்டன்ட் சரியில்லாத காரணத்தினால் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. இந்நிலையில் லியோ படம் நிச்சயம் பெரிய வசூல் அல்லது பெற வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாக உண்மையை உடைத்துள்ளார்.