சேலையை அட்ஜஸ்ட் செய்தால் கூட அதனை ஜூம் பண்ணி வீடியோ எடுத்து மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என பிரபல நடிகை வாணி போஜன் ஆதங்கத்துடன் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்பொழுது தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகை வாணி போஜன்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வ மகள் சீரியல் மூலம் மிகப்பெரிய பிரபலத்தினை கண்ட நிலையில் பிறகு தொடர்ந்து அடுத்த அடுத்த சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.பிறகு திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த வாணி போஜன் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளை படத்தின் மூலம் ஹீரோயினாக பேமஸ் ஆனார்.
இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இதனை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் லாக் அப், மலேசியா டூ ஆம்னிஷியா, இராதே ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும், மிரள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள வாணி போஜன் தற்பொழுது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்து தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார்.
அந்த வகையில் அருள்வாய், கேசினோ, பாயும் புலி நீ எனக்கு, தாழ் திறவா, லவ், ஊர் குருவி, ரேக்ளா, ஆர்யன் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் இதனை அடுத்து செங்களம் என்ற வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை எஸ் ஆர் பிரபாகரன் இயக்கியுள்ள நிலையில் இந்த வெப் தொடர் விரைவில் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ்சாக உள்ளது.

எனவே இந்த வெப் தொடரின் ப்ரோமோஷனில் பங்குபெற்று வரும் வாணி போஜன் அளித்துள்ள பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் பொழுது சேலையை சரி செய்தால் கூட அதை ஜூம் பண்ணி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதற்கான ஆபாசமாக கமெண்ட் செய்யும் விஷமிகளும் இங்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இன்று சினிமாவில் நிறைய ஏற்ற இறக்கங்களை பார்த்துவிட்டதாகவும் முதல் ரோலையும் தன்னை பற்றி வரும் நெகட்டிவ் கமெண்டுகளை பார்த்து பயந்ததாக கூறிய வாணி போஜன் தற்பொழுது அனைத்தையும் எதிர்கொள்ளும் தைரியம் தனக்கு வந்துள்ளதாக பேசி உள்ளார்.